வேலூர் ஜெயிலில் முருகன் 8-வது நாளாக உண்ணாவிரதம்
வேலூர் ஜெயிலில் முருகன் 8-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன் மீது உள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும், பரோல் வழங்க அனுமதி கேட்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். ஜீவசமாதி நிலையை அடைய அவர் யாரிடமும் பேசாமல் உண்ணாவிரதம் இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்தார். இந்தநிலையில் நேற்றும் அவர் 8-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை சிறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர் உண்ணாவிரதம் இருப்பதாக கடிதம் ஏதும் அளிக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story