ஐம்பொன் சிலைகளை மீண்டும் அருங்காட்சியக அதிகாரிகள் ஆய்வு


ஐம்பொன் சிலைகளை மீண்டும் அருங்காட்சியக அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை மீண்டும் அருங்காட்சியக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வருகிற மே மாதம் 24 -ந்தேதி(புதன்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக கடந்த 16-ந்் தேதி மேல கோபுர வாசல் அருகே உள்ள குபேர மூலையில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்ட பொழுது பூமிக்கு அடியில் 22 ஐம்பொன் சிலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட பூஜை பொருட்களும், 462 செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டது. இந்த பொருட்கள் அனைத்தும் சட்டை நாதர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் அருங்காட்சியக காப்பாட்சியாளர் மணிமுத்து தலைமையிலான குழுவினர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா மற்றும் தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சிலைகள் மற்றும் செப்பேடுகள் எந்த ஆண்டை சேர்ந்தவை, அளவு, உயரம், அளம், எடை உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அவற்றின் விபரங்களை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story