ராணி வேலுநாச்சியார் குறித்த இசை நாடக விழா


ராணி வேலுநாச்சியார் குறித்த இசை நாடக விழா
x

சிவகங்கையில் வருகிற 30-ந் தேதி நடைபெறவுள்ள வேலுநாச்சியாரின் இசை நாடக விழா குறித்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

சிவகங்கை

சிவகங்கையில் வருகிற 30-ந் தேதி நடைபெறவுள்ள வேலுநாச்சியாரின் இசை நாடக விழா குறித்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வு

சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வருகிற 30-ந் தேதி வீரமங்கை வேலுநாச்சியாரின் இசை நாடக விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது:- சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம், போராட்டம் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அரசின் சார்பில் வேலுநாச்சியாரின் வரலாறு குறித்து இசையார்ந்த நடன நாடகம் கடந்த 13-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.

30-ந் தேதி

தொடர்ச்சியாக ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் நிறைவாக சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்த்த வேலுநாச்சியாரின் இசை நாடகம் வருகிற 30-ந் தேதி வேலுநாச்சியார் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது. தற்போதைய இளைய தலைமுறையினரும், எதிர்கால சந்ததியினரும் வேலுநாச்சியாரின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை அனைவரும் கண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, முன்னாள் அமைச்சா் தென்னவன், சிவகங்கை நகர்மன்ற தலைவா் துரைஆனந்த், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நாகராஜபூபதி, நகர்மன்ற பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், உதவி செயற்பொறியாளர் பெருமாள்சாமி, வட்டாட்சியா் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story