முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி பகுதி 12-வது வார்டு, 16-வது வார்டுகளில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரசபை கவுன்சிலர்கள் மு.ஷேக் காதர் மைதீன், முகம்மது நயினார் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் வகாப், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வக்கீல் எஸ்.ஜாகீர் அப்பாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.காதர் மைதீன், நகர துணை செயலாளர்கள் ஜாகீர் உசேன், முகம்மது பிலால், முஸ்லிம் யூத் லீக் தலைவர் மைதீன் பிச்சை, பொருளாளர் அப்துல் காசிம், துணை தலைவர் அரசன் காதர், மாணவர் பேரவை நகர தலைவர் முகம்மது பைசல் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், நகராட்சி ஆணையாளர் சுகந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை விரைவில் நிைறவேற்றி கொடுப்போம் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.