முஸ்லிம் அமைப்பினர் 28 பேர் கைது


முஸ்லிம் அமைப்பினர் 28 பேர் கைது
x

முஸ்லிம் அமைப்பினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள், அலுவலகங்கள் மீது சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அமைப்புகளுக்கு மத்திய அரசால் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே முஸ்லிம் அமைப்பினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர்.

கறம்பக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story