குமரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
குமரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பக்ரீத் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு தரப்பு முஸ்லிம்கள் நேற்றே பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நாகர்கோவில் இளங்கடை, திருவிதாங்கோடு ஆகிய இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இளங்கடையில் புதுத்தெருவில் காலையில் நடந்த தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் சிறுவர்- சிறுமிகளும் பங்கேற்று ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். தமிழக காஜி உத்தரவுபடி ஒரு தரப்பு முஸ்லிம்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
Related Tags :
Next Story