விநாயகர் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற முஸ்லிம்கள்
விருத்தாசலம் விநாயகர் கோவிலுக்கு முஸ்லிம்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனா்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஆயியார் மடத்தில் சுவர்ண கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் முஸ்லிம்கள் நவாப் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முஸ்தபா தலைமையில் நிர்வாகிகள் சோழன் சம்சுதீன், சிட்டி சம்சுதீன், ஆற்காடு ஜலாலுதீன், 14-வது வார்டு கவுன்சிலர் ஜெயம் ராஜா முகமது, ஜமாலுதீன், ஜோதி இப்ராஹிம், மூன் லைட் சையது அக்பர், சேட்டு ஹாஜியார் உள்ளிட்ட பலர் மேளதாளங்கள் முழங்க கும்பாபிஷேகத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது விருத்தாசலம் நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், கவுன்சிலர் கருணா மற்றும் கோவில் விழா குழுவினர் சீர்வரிசைப் பொருட்களை பெற்றுக்கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.