முத்தாலம்மன் கோவில் திருவிழா; கழுமரம் ஏறிய இளைஞர்கள்


முத்தாலம்மன் கோவில் திருவிழா; கழுமரம் ஏறிய இளைஞர்கள்
x

கோபால்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இளைஞர்கள் கழுமரம் ஏறினர்.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே ராகலாபுரத்தில் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி சாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

தொடர்ந்து கோவில் முன்பு மூங்கில் தோரணம் கட்டுதல், காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் அலங்காரம் செய்து கோவில் வந்தடைதல், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென சுமார் 65 அடி உயர மரம் கோவில் மந்தை முன்பு ஊன்றப்பட்டது. கழுமரத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏற முயன்றனர்.

கிராம மக்கள் கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர். அதில் சிலர் கீழே விழாமல் மரத்தின் உச்சியை அடைந்தனர். திருவிழாவில் ராகலாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். விழாவினை ராகலாபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story