முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

பட்டிவீரன்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி முதல் கால யாகபூஜை, விநாயகர் ஹோமம், கிராம தேவதைகள் அனுக்கை, வாஸ்து சாந்தி பூஜை, லட்சுமி ஹோமம் போன்ற பூஜைகள் நடந்தன. அதன்பின்னர் 2-ம் கால யாக சாலை பூஜைகளான வருண பூஜை, சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், வேதபாராயணம் போன்ற பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் மூலஸ்தான கோபுர விமானகலசம் மற்றும் ராஜகோபுர விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின் போது வானில் கருடன் வட்டமடித்ததை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story