முத்தாரம்மன் கோவில் கொடை விழா
முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி முத்தாரம்மன் கோவில் கொடை விழா 10 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி செல்வ கணபதி கோவிலில் குருபூஜை, பெருமாள் சுவாமி கோவிலில் வில்லிசை, சிறப்பு பூஜை, முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சீர் கொண்டு வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, பக்தர்கள் பால்குடம் எடுத்து பவனி வருதல், மஞ்சள் பெட்டி ஊர்வலம், அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் வீதி உலா வருதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடர்ந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்வலம் வருதல், விசேஷ பூஜை, தீர்த்தம் எடுத்து வருதல், இரவு அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆறுமுகபாண்டி, துணை தர்மகர்த்தா ராஜசேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.