முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே செங்குடியில் முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே செங்குடியில் முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி பெருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் மற்றும் சுவாமி வீதி உலா ஆகியவை தொடர்ச்சியாக நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக மேள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செங்குடி கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.