கிருஷ்ணகிரியில் முத்து பிடாரியம்மன் கோவில் திருவிழா


கிருஷ்ணகிரியில் முத்து பிடாரியம்மன் கோவில் திருவிழா
x

கிருஷ்ணகிரியில் முத்து பிடாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி முருகர் நகரில் உள்ள முத்துபிடாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 12-ந் தேதி 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டனர்.

தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் இருந்து மாவிளக்கை முருகர் நகர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு படைத்து சாமி கும்பிட்டனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். முன்னதாக கோவில் வளாகத்தை சுற்றியுள்ள முனியாண்டி, ஜெலக்கன்னியம்மன், நாகம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இரவு 7 மணிக்கு பக்தி பஜனை நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story