முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் வருசாபிசேகம்


முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் வருசாபிசேகம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் வருசாபிசேகம் நடந்தது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலெட்சுமிபுரம் யாதவர் தெரு சந்தனமாரியம்மன் கோவில் வருசாபிசேகம் நேற்று நடைபெற்றது. இவ்விழா காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, கும்ப பூஜை, நவக்கிரக ஹோமம், கோ பூஜையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்கள் விமான தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் சந்தனமாரியம்மன், முத்தாரம்மன், உச்சினிமகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாபிரபு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story