முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
பூளவாடியில் மிகவும் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கணபதிஹோமமும் திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் 11 முதல் 2 மணி வரை அம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல் நிகழ்ச்சியும் இரவு 6 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. 10-ந்தேதி காலை 7 மணிக்கு பூவோடு எடுத்தல் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது 11-ந்தேதி காலை 9 மணி முதல் அம்மன் திருவீதி உலா வருதல் மஞ்சள் நீராடுதல் 12-ந்தேதி அம்மனுக்கு மகா அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.