முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் கிராமத்தில் திருநங்கைகளால் முத்துமாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு அபிஷேக அலங்கார பூைஜகள் நடைபெற்ற நிலையில் திருநங்கைகள் அலகு குத்தி தீச்சட்டி எடுக்கும் விழா நடைபெற்றது. முன்னதாக காட்டூரணி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டம் பாட்டம் மற்றும் கரகாட்டத்துடன் வந்தனர். நிகழ்ச்சியில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்திருந்து ஒன்றாக கூடி கோவில் வாசல் முன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்து கொண்டாடினர். இதன் தொடர்ச்சியாக நேற்று கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை திருநங்கைகள் தலையில் எடுத்து வைத்து அம்மனின் புகழ்பாடி வரிசை, வரிசையாக ஊர்வலமாக சென்று நீர்நிலையில் கரைத்தனர்.


Related Tags :
Next Story