முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x

கடுவனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்கோவில் உள்ளது. இங்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது நோய் தொற்று குறைந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பால்குடம், கஞ்சி கலயம் சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் கடுவனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story