முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இறுதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து வடக்களூர் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்தும், மா விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில் கறம்பக்குடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி நாடகம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story