முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர் குதிரைகளின் ஆட்டத்துடன் மேள தாளங்கள் முழங்க பூ தட்டுகளை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து மலரபிஷேகம் செய்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து நாலாஞ்சந்தி கருப்பர் உள்பட கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. வருகிற 17-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. 24-ந் தேதி பொங்கல் திருவிழாவும், 25-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story