முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா


முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
x

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சோத்துப்பாழை நாட்டை சேர்ந்த பழைய ஆதனக்கோட்டை, மடத்துக்கடை, கன்டியன்தெரு, ஆதிதிராவிடர்காலனி, அக்ரகாரம், வளவம்பட்டி, சோத்துப்பாழை சொக்கநாதபட்டி, கருப்புடையன்பட்டி, குப்பையன்பட்டி, கூத்தாச்சிப்பட்டி, வண்ணாரபட்டி, கல்லுக்காரன்பட்டி, கணபதிபுரம், துருசுப்பட்டி, அம்மாபுதுப்பட்டி, நரியனிப்பட்டி, உரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மண்டகபடிதாரர்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் சிலையுடன் பூக்களை எடுத்து வந்தனர். அவ்வாறு அவர்கள் எடுத்து வந்த பூக்களை, முத்துமாரியம்மன் கோவிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரத்தின் அருகே உள்ள கொடிமரத்தின் முன் குவியலாய் சேர்த்தனர். இரவில் பிரம்ம முகூர்த்தத்தில் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, பின்னர் அலங்கரிக்கப்பட்டு நெய், வடை, பாயாசம் போன்றவற்றை படையலிட்டனர். இதையடுத்து மேளதாளம் முழங்க தீபாராதனை காட்டப்பட்டு, சாஸ்திரிகளை கொண்டு 1,008 லலிதா சஹஸ்ரநாம மந்திரம் கூறப்பட்டு; கொடிமரத்தில் சேர்த்த பூக்குவியலை 1,008 பூத்தட்டுகள் மூலம் அம்மனுக்கு சமர்ப்பித்தனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மலர்களுடன் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story