முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு


முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி துண்டம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழா கடந்த 18-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அங்குரார்பணம், யாக சாலை அலங்காரம், சூரியகலாகர்சனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், மகாபூர்ணஹூதி, மகாதீபாராதனை நடந்தது. 20-ந் தேதி முத்துமாரி மூல மந்திர சக்தி ஹோமம், மருந்து சாத்துதல், 3-ம் கால யாகசாலை பூஜைகள், சுகாசினி பூஜை, சர்வ சக்தி மந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, ரக்சாபந்தனம், 4-ம் கால மகாபூர்ணஹூதி, காலை 9 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கும், தொடர்ந்து மூலஸ்தான குடமுழுக்கும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story