முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளம் கீழ தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 2-ம் நாளில் குருநாதர் நாராயணசாமி அக்னி சட்டியை எடுத்து கிராமத்தில் உள்ள தெருக்களில் வலம் வந்தார். 3-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

4-ம் நாளான நேற்று மாலையில் உருவம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. 5-ம் நாளான 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் அலங்கரிக்கப்பட்ட பெரிய பூம்பல்லக்கு சப்பரத்தில் முத்துமாரியம்மன் வீதி உலா நடக்கிறது. 6-ம் நாளான 12-ந் தேதி (புதன்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை ஆர்.பாலசுப்பிரமணியன், நிர்வாக குழு தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

---------


Next Story