முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்


முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
x

ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்வம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் ேகாவில்

அரிமளம் அருகே ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல், 8-ந்் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவும் அண்ணா சீரணி கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே நேற்று முன்தினம் 9-ம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்ட நிலையில் தேரோட்டம் நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து நள்ளிரவு கோவில் அருகே அமைந்துள்ள ஊரணியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தெப்பத்தில் வலம் வந்து முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து முத்துமாரியம்மன் கோவிலில் காப்பு கலைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.


Next Story