முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து காலை 11 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள், பால், தேன், இளநீர், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடி மரத்துக்கும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மனுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் கிளி, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் செடில் உற்சவம் வருகிற 11- ந்தேதி நடக்கிறது.