முத்தாரம்மன் கோவில் திருவிழா
உடன்குடி காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா கடந்த 28-ந்தேதி மாலையில் மாகாப்பு பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் மாலை 4 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரறு 12 மணிக்கு அலங்கார தீபராதனையுடன் கும்பம் திருவீதிவருதல் நடைபெற்றது. 30-ந் தேதி சிறப்பு பூஜையுடன் கும்பம்தெரு வீதி வருதல், முளைப்பாரி ஊர்வலம், வாண வேடிக்கை, வில்லிசையும், 31-ந் தேதி ்அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு அம்மன் சப்பரத்திய பவனி ஆகியன நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், நண்பகல் 2 மணிக்கு முண்டன் சுவாமிக்கு ஆட்டுக்கிடா பூஜை மாலை 5 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் கிராமமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.