நடுக்காலங்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா


நடுக்காலங்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடுக்காலங்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி நடுக்காலங்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டு கொடை விழா நடந்தது. தினமும் காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் திருவீதி வருதல், மஞ்சள் பெட்டி ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், பக்தர்கள் நேமிசங்கள் செலுத்துதல், சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், கணியான் கூத்து உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story