தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரம் அரியபணங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 39). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை செய்து வந்்தார். இவரது மனைவி காந்தி, மகன் மகள் ஆகியோர் திருப்பூரில் வசித்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து தினசரி ரவி வெள்ளகோவில் வந்து வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக ரவி வீரசோழபுரத்தில் பெற்றோர் வீட்டில் தங்கி வேலைக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று ரவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ரவியை மீட்டு குடும்ப பிரச்சினை காரணமாக ரவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.




Next Story