தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட த.மு.மு.க.வினர்


தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட த.மு.மு.க.வினர்
x
திருப்பூர்


நபிகள் நாயகத்தை தவறாக பேசியதை கண்டித்து த.மு.மு.க. சார்பில் பல்லடம் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போலீசார் தபால் நிலையத்திற்கு முன் தடுப்புகள் அமைத்து இருந்தனர். இதனைத் தாண்டி செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் த.மு.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து த.மு.மு.க.வினர் பல்லடம்- மங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் ரோட்டின் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story