மூவலூர் ஏழுமலையான் ஐ.டி.ஐ. மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம்
தடகளம்-குழு விளையாட்டு போட்டிகளில் மூவலூர் ஏழுமலையான் ஐ.டி.ஐ. மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தடகளம்-குழு விளையாட்டு போட்டிகளில் மூவலூர் ஏழுமலையான் ஐ.டி.ஐ. மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்
மயிலாடுதுறை மாவட்ட தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு தொழில் பயிற்சி நிலையங்களில் இருந்து 185 வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் மூவலூர் ஏழுமலையான் ஐ.டி.ஐ. மாணவர்கள் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் 74 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தொழில் பயிற்சி நிலைய துணைத்தலைவர் ராகவ் தினேஷ், முதல்வர் முருகானந்தம் மற்றும் மேலாளர் துரை.சரவணன், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சியாளர் தனலட்சுமி ஆகியோர் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
வாழ்த்து
மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஏழுமலையான் ஐ.டி.ஐ. யின் தலைவர் ரவி, தாளாளர் தேவகி, இயக்குனர்கள் காவியபிரியா, மதுமதி ஆகியோர் வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி அலுவலர் ராஜமணிகண்டன், துணை பயிற்சி அலுவலர் தியாகராஜன், கேட்டரிங் கல்லூரி முதல்வர் வெங்கடேஷ் பாபு மற்றும் சதீஷ், விஜயன், வில்லியம் பால்ராஜ், ராஜாசெல்வகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.