இனி நடிக்க மாட்டேன்.. மாமன்னன்தான் கடைசி...! கமல் படத்திலிருந்து விலகல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


இனி நடிக்க மாட்டேன்.. மாமன்னன்தான் கடைசி...! கமல் படத்திலிருந்து விலகல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Dec 2022 10:58 AM IST (Updated: 14 Dec 2022 11:02 AM IST)
t-max-icont-min-icon

விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம்.

என் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவேன்.

தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story