`என் குப்பை, எனது பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
`என் குப்பை, எனது பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் செயல்பாடுகள் மற்றும் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில், செயல் அலுவலர் இளவரசி முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளிடம் மஞ்சள் பை கலாசாரம் குறித்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற செயல்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். என்குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story