மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நூற்றாண்டு விழா


மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நூற்றாண்டு விழா
x

மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தபால் உறையை வெளியிட்டார்.

சென்னை

நூற்றாண்டு விழா

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் உறைவிட உயர்நிலைப்பள்ளி மற்றும் மாணவர் இல்லத்தின் முகப்பு கட்டிடமான ஏழைகளின் அரண்மனை கட்டிடத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்த மகராஜ் வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு தபால் உறையை வெளியிட்டார். மேலும், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை தொடங்கி தங்களது தியாகங்கள் மூலம் ஏராளமானோருக்கு உதவிகளை செய்து வரும் அத்தனை பேரும் பெருமைக்குரியவர்கள்.

மனிதநேயத்தை வளர்க்க வேண்டும்

நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பு மனிதநேயத்தை போதித்து வருகிறது. சுவாமி விவேகானந்தரின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு ஏற்ப தொடர்ந்து மனிதநேயத்தை வளர்க்க வேண்டும்.

தொலைநோக்கு மற்றும் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் உலக அளவில் வல்லரசாக மாறும் பாதையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இதுபோன்றதொரு புதிய பாரதத்தை உருவாக்க ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகள் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தலைமை தபால் அதிகாரி செல்வக்குமார், ஆடிட்டர் குருமூர்த்தி, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் செயலாளர் சத்யஞானானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story