பூதப்பாண்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம ஆசாமி உருவம்


பூதப்பாண்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம ஆசாமி உருவம்
x

பூதப்பாண்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்ம ஆசாமி உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்ம ஆசாமி உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

மர்மஆசாமி

பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை நடுமார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று ஆபிரகாம் தனது மனைவி ஏஞ்சல் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த பகுதியில் ஓடும் அனந்தனார் கால்வாயில் குளிக்கச் சென்றார். ஆபிரகாம் மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டு கழிவறைக்கு சென்றதாக தெரிகிறது. ஏஞ்சல் கால்வாயில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி இறங்கி வந்து திடீரென ஏஞ்சலின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து ஏஞ்சல் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில், நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமி சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்வது போல் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story