மர்ம காய்ச்சல் தடுப்பு பணி
மூலைக்கரைப்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சல் தடுப்பு பணிகள் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி அறிவுறுத்தலின்படி மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிங்கநேரி பகுதியில் பொதுமக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் வாகனம் மூலமாக காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறு நோய் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவ குழுவினர், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story