களக்காடு பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்-100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

களக்காடு பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்-100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
x

களக்காடு பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மர்ம காய்ச்சல்

களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் களக்காடு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

சிறப்பு மருத்துவ முகாம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் குறைவாக உள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே களக்காடு பகுதியில் சுகாதார துறையினர் முழு தூய்மை பணியில் ஈடுபடுவதுடன் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story