மூலைக்கரைப்பட்டியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
மூலைக்கரைப்பட்டியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதால் சுகாதார தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பன்குளம், எடுப்பல், ஆயர்குளம், கல்லத்தி, இளையார்குளம், ஆரம்பூண்டார்குளம், சிங்கனேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறு குழந்தைகளுக்கு இருந்த மர்ம காய்ச்சல் தற்போது பெரியவர்களுக்கும் அதிகமாக பரவுகிறது. சளி, இருமல், காய்ச்சலுடன் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி நாங்குநேரி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதிக அளவு வெயில் தாக்கம் காரணமாக சளி, காய்ச்சல், இருமல் நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் கிராமங்களுக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story