பள்ளி சீருடையில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்
தென்காசியில் பள்ளி சீருடையில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி
தென்காசி சிவந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் தென்காசி மேலமாசி வீதியில் பிளக்ஸ் டிசைனிங் செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்து மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story