அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மாயமான தாய்-மகன் ராஜஸ்தானில் உள்ளனர்சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தகவல்


அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மாயமான தாய்-மகன் ராஜஸ்தானில் உள்ளனர்சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மாயமான தென்காசியை சேர்ந்த தாய்-மகன் ராஜஸ்தானில் உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

விழுப்புரம்

அன்புஜோதி ஆசிரமம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் ஜூபின்பேபி என்பவர் அன்புஜோதி ஆசிரமம் என்ற பெயரில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தை நடத்தி வந்தார்.

இந்த ஆசிரமத்தில் இருந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமிஅம்மாள் (வயது 85), அவரது மகன் முத்துவிநாயகம் (48) உள்ளிட்ட 14 பேர் மாயமாகினர். அவர்கள் குண்டலப்புலியூரில் இருந்து எந்த ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டனர் என்ற விவரங்களை சேகரித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஆசிரமங்களிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில்...

இதில் லட்சுமிஅம்மாள், முத்துவிநாயகம் ஆகிய இருவரும் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறுகையில், மாயமான தென்காசியை சேர்ந்த தாய், மகன் 2 பேரும் ராஜஸ்தானில் உள்ளனர். இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ராஜஸ்தானுக்கு விரைந்து சென்று அந்த ஆசிரமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்ற 12 பேரின் நிலைமை என்ன? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறினர்.


Next Story