மாயமான முதியவர் பிணமாக மீட்பு


மாயமான முதியவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாயமான முதியவர் பிணமாக மீட்பு

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி வடக்கூரை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது60). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தாய், தந்தை இறந்த பின்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு உறவினரின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி முதல் தாணுமூர்த்தியை காணவில்லை. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தாணுமூர்த்தியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள பெரியகுளத்தில் முட்புதருக்கு இடையில் சகதியில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் மாயமான தாணுமூர்த்தி என்பது தெரிய வந்தது. அவர் அந்த பகுதியில் சென்றபோது சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story