சாலை நடுவில் பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள்


சாலை நடுவில் பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள்
x

சாலை நடுவில் மர்ம நபர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூஞ்சூர்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து ஈடிகை தோப்பு கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் ரூ.45.45 லட்சம் மதிப்பில் தார்சாலையாக புதுப்பிக்கப்பட்டது. இந்த கிராம மக்கள் விவசாய நிலங்கள் மற்றும் கணியம்பாடி, நெல்வாய், ஈடிகைதோப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் மூஞ்சூர்பட்டில் இருந்து ஈடிகைதோப்பு செல்லும் தார் சாலையின் குறுக்கே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சமூக விரோதிகள் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் அந்த பகுதிக்கு செல்லும் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் கூட போக முடியாத அளவுக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி படுகின்றனர். இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்திற்கு அருகில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்த இடத்தில் விபத்து ஏற்படும் போது பெரிய அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. அடுத்த வாரம் பள்ளம் தோண்டப்பட்ட வழிதடத்தில் உள்ள மெச்சியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story