ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை திருடி சென்ற மர்மநபர்கள்


ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை திருடி சென்ற மர்மநபர்கள்
x

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கோபுரம்

நகை, பணம், பொருட்கள், வாகனங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை ஆசாமிகள் திருடி சென்றதை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செல்போன் கோபுரத்தையே மா்ம நபா்கள் திருடி சென்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அரசவனம்காட்டில் விஜயபாஸ்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு செல்போன் கோபுரம் அமைத்தது. இந்த நிலையில் தனியார் செல்போன் நிறுவன ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக அரசவனம்காட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்து செல்போன் கோபுரத்தை காணாததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருடி சென்றனர்

ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் பிரித்து கோபுரம் முழுவதையும் திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து செல்போன் நிறுவன மேலாளர் வெங்கடேசன் குடவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கோபுரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.குடவாசலில் செல்போன் கோபுரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story