அரியலூரில் என் மார்ட் புதிய ரெடிமேட் ஷோரூம் திறப்பு
அரியலூரில் என் மார்ட் புதிய ரெடிமேட் ஷோரூம் திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.
அரியலூர் எம்.பி. கோவில் தெருவில் உள்ள ஸ்ரீவிஜயாநிவாசில் ஏ.பி.என். ஜவுளி நிறுவனத்தின் சார்பில் என் மார்ட் என்ற புதிய ரெடிமேட் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர்கள் சுதாகர்-காமாட்சி மற்றும் ஆனந்த்-மகாலட்சுமி தம்பதியினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க் துணை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் ராஜாராம், செஞ்சி சத்தியமூர்த்தி, நகர வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்த திறப்பு விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், சிதம்பரம் எம்.பி. தொல்.திருமாவளவன், எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், பெரம்பலூர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரோகித் கிருஷ்ணா, தர்ஷினி, கன்சிகா, ஆகியோர் செய்திருந்தனர். விஜயகுமார் நன்றி கூறினார்.