பேய்குளம்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம்


பேய்குளம்பள்ளியில்  சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேய்குளம்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சிகரம் அறக்கட்டளை சார்பில் பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமும், சர்வதேச பெண் குழந்தைகள் தினமும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இமானுவேல் தலைமை தாங்கினார். சிகரம் இயக்குனர் முருகன் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலன் உட்பட ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story