கருப்பூர் சுங்கச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் மறியல்
கருப்பூர் சுங்கச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
கருப்பூர்:
ஓமலூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர், தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு வாகனங்களில் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் அவர்களது வாகனங்களுக்கு அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று கூறி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் நல்லான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு கட்டணம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story