தற்காலிக விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு


தற்காலிக விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு
x

தற்காலிக விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு சீமான் அறிவிப்பு.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள 52 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த பகுதிநேர விரிவுரையாளர்களை தொகுப்பூதியம் என்ற பெயரில் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து வறுமையில் தள்ளும் கொடுஞ்செயலாகும். இது எவ்வகையில் நியாயமாகும்?.

போற்றுதலுக்குரிய அறப்பணியான அறிவு புகட்டும் ஆசிரியர் பணி செய்தவர்களை, கொடுங்குற்றவாளிகள் போல் நள்ளிரவில் இழுத்துச் சென்று கட்டாயப்படுத்தி கைது செய்துள்ளது கொடுங்கோன்மைச் செயலாகும். ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் வாழ்வாதார உரிமைக்காக அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story