நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் தேசிய நூலக வார விழா


நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில்   தேசிய நூலக வார விழா
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் தேசிய நூலக வார விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறைச்சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். டாக்டர் ஆர்.சீனிவாசகன், அரசு நூலகர் அழகர் சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி பொருளாளர் ஜெ.ரத்தினராஜா முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாககுழு உறுப்பினர்கள் . தாழையப்பன், தங்கமணி, பால்ராஜ், மனோகரன், செல்வம், பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 100 மாணவ- மாணவிகள் அரசு கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.


Next Story