பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து நாடார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து நாடார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x

பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து நாடார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாளில் நாடார் சமுதாயத்தை குறிப்பிட்டு ஒரு கேள்வி இடம் பெற்று இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்தும், வினாத்தாளை தயாரித்தவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று எந்த ஒரு தவறும் நடக்க கூடாது என்பதற்காகவும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் அனைத்து நாடார் அமைப்புகள் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எடிசன் ஜெபதுரை, சான்றோர் குல நாடார் அறக்கட்டளை தலைவர் துரைசாமி, செயலாளர் சாமிநாதன், பனங்காட்டு மக்கள் கழக பொறுப்பாளர் மோகனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், நாடார் மகாஜன சங்க செயலாளர் ஆனந்தகுமார், நாடார் பேரவை பொதுச்செயலாளர் செல்லப்பன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், பனங்காட்டு படை கட்சி பொறுப்பாளர் ஞானவேல், தமிழ்நாடு நாடார் பேரவை சேலம் மாவட்ட பொறுப்பாளர் பிரேம்குமார், பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா, வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் வர்கீஸ், காமராஜர் மக்கள் பேரியக்க தலைவர் பூமிநாதன், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜிராஜன், அயோத்தியாப்பட்டணம் நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் எழில்குமார், எடப்பாடி நாடார் சங்க நிர்வாகிகள் சித்தன், குணசேகரன், சேகர், நாடார் மகளிர் சங்க தலைவிகள் பூங்கொடி, வனிதா, துளசிமணி, வெண்ணிலா, கொங்குநாடு நாடார் சங்க தலைவர் ராமசாமி, பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கோவிந்தன், துணை செயலாளர் சண்முகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story