நட்டாத்தி நாடார்கள் நலச்சங்க ஆண்டு விழா
தூத்துக்குடி மாவட்ட நட்டாத்தி நாடார்கள் நலச்சங்க ஆண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நட்டாத்தி நாடார்கள் நலச்சங்க ஆண்டு விழா தூத்துக்குடி ஐசக் ஆனந்த மகாலில் நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். சி.ஜான் கிருபாகரன், புரவலர் கே.வேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வி.டேவிட்சன் வரவேற்று பேசினார். எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம், பி.அன்னாள் ஆனந்தகனி, எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், ஆசிரியர் கே.பொன்ரமேஷ் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக டி.காளிதாஸ் பண்ணையார் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப்பணம், தங்க நாணயம், கேடயம் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரையண்ட்நகர் நேசக்கரங்கள் ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகளை சங்க துணைத்தலைவர் ஞானமணி வழங்கினார்.
விழாவில் தேனி, உசிலம்பட்டி, நரிப்பையூர் நட்டாத்தி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் எஸ்.அசோக் மோசஸ் என்ற பாபு நன்றி கூறினார்.