இருளில் மூழ்கி கிடக்கும் நாகை புதிய கடற்கரை

இருளில் மூழ்கி கிடக்கும் நாகை புதிய கடற்கரை
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை புதிய கடற்கரையில் உயர் கோபுர மின் விளக்கு பழுதானதால் இருளில் மூழ்கி கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

நாகப்பட்டினம்

நாகை புதிய கடற்கரையில் உயர் கோபுர மின் விளக்கு பழுதானதால் இருளில் மூழ்கி கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

புதிய கடற்கரை

நாகையின் பொழுதுபோக்கு அம்சமாக புதிய கடற்கரை உள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் கூடும் முக்கிய கடற்கரையாகவும் இந்த புதிய கடற்கரை உள்ளது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து இளைப்பாறுகின்றனர்.

காலை, மாலை நடை பயிற்சி செய்வதற்காகவும் வருகின்றனர். குறிப்பாக இங்கு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதனால் இரவு 9 மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும்.

அசம்பாவித சம்பவம்

இந்த நிலையில் கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருக்கிறது. மின்விளக்கு எரியாததால் நாகை புதிய கடற்கரை இருளில் மூழ்கி கிடக்கிறது.

இதனால் கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

ஒளிர விட வேண்டும்

எனவே நாகை புதிய கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து ஒளிர விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story