தம்பதியிடம் கத்திமுனையில் நகை பறிப்பு


தம்பதியிடம் கத்திமுனையில் நகை பறிப்பு
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 6½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் ஒன்றை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தம்பதியிடம் நகை பறிப்பு

ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45), இவரது மனைவி கலைமகள் (38). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக விஜயமங்கலம் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் மோட்டார்சைக்கிளில் விட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை 2 வாலிபர்கள் திடீரென்று வழிமறித்தனர். அத்துடன் கத்தியை காட்டி மிரட்டி தம்பதி இருவரும் அணிந்திருந்த 6.5 பவுன் சங்கிலி மற்றும் செல்போன் ஒன்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசில் கலைமகள் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கத்திமுனையில் தம்பதியிடம் மர்ம ஆசாமிகள் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

---------------


Next Story