14 பதக்கங்களை பெற்று நாகை மாணவி சாதனை
14 பதக்கங்களை பெற்று நாகை மாணவி சாதனை; போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பாராட்டு/
நாகப்பட்டினம்
நாகை நம்பியார் நகரை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகள் ஐஸ்வர்யா. இவர் தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சிப்பெற்றதுடன் 14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து பல்கலைக்கழகம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்பட அனைத்து தரப்பினரும் மாணவி ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர். இவ்வாறு சாதனை படைத்து நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்ட மாணவி ஐஸ்வர்யாவை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் மென்மேலும் இது போன்ற சாதனைகளை படைக்க மாணவியை ஊக்குவித்து கவுரவப்படுத்தினார்.
Related Tags :
Next Story